அதுவும் வேண்டும்
எனக்கு!
இதுவும்
வேண்டும்
எனக்கு!
அதுவும் போதாது இதுவும் போதாது எனக்கு!
அடுத்தவரின் கையில் இருப்பதும் வேண்டும் எனக்கு!
என்று எண்ணும் மனம் கொண்ட மனிதா!
இப்படி
போட்டிபோட்டு,
பொறாமைபட்டு,
சண்டையிட்டு,
பறிப்பதற்கு
வாழ்க்கை ஒன்றும்
மாந்தோட்டம் அல்ல,!
அது அழகிய பூந்தோட்டம்,
விட்டுக்கொடுத்து,
அடுத்தவரை தட்டிக்கொடுத்து,
பிறரை வாழ வைத்து இரசிப்பதே வாழ்க்கை!
இதை அறிவாய் மனிதா!
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை 603001
(10/05/18)
No comments:
Post a Comment