முகவரி
என்னை தவிக்க வைத்தாய்!கவிகள் எழுதி
கவிப்பித்தனாய் மாறிய நான்!
கவியே!
உனக்கு ஓர் கவியை
அனுப்பி வைத்தேன்!
அது இன்னும்
தேடிக்கொண்டு இருக்கிறது
உன் முகவரியை!
என் கவிகள் உனக்கு கிடைத்தால்
மறவாமல் உன் முகவரி
எனக்கு எழுதி அனுப்பு!
இல்லாவிடின் என்
முகவரிக்கு உன்
கோபத்தை கடிதமாய் அனுப்பு!
படைப்பு :
கவிக்குயவன்
செங்கை 603001
1/07/17
No comments:
Post a Comment