Saturday, 1 July 2017

குரலிசை


என்னை
தாலாட்டிய
தாயின் குரல் !

என்னை
சீராட்டிய
தந்தையின்
குரல்!

என்னுடன்
சண்டையிடும்
சண்டைக்காரி தங்கையின்
குரல்!

என்னை
நல்வழிபடுத்த
துடிக்கும்
மாமனின் குரல்!

என்னை செல்லமாய் திட்டிய
தாத்தன், பாட்டியின்
குரல்!

என்னுடன்
என்றும் துணைநிற்கும்
உடன் பிறவா சகோதரனின் குரல்!

எனக்கு தோள் கொடுக்கும்
தோழமையின் குரல்!

என் குறையை
சுட்டிகாட்டும்
என் தோழியின் குரல்!

இக்குரல்கள்
திருக்குறளை போன்று
சிறப்பு 
என் வாழ்வில்!

இக்குரல்கள்
என் செவிகளில்
இன்னிசையாய் ஒலிக்கிறது!

இக்குரல்களை
மிஞ்சிய ஓர் இசை நாதம்
நாரதனிடம் கூட இல்லை
என்பேன் நான்!

என் செவிகளின்
வழியாக
என் மனதை
திருடிய குரல்கள்!

இசையாய் மாறி
குரலிசையாய்
என் மனக்குடிலில்
வாசம் செய்கின்றன!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
01/07/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24