Thursday, 20 July 2017

கவிக்குயவனின் ஹைக்கூ கவிதைகள் 1


கவிக்குயவனின் ஹைக்கூ கவிதைகள்



தலைப்பு : மதம்

1:

குடிபோதையில் இருந்து தப்பித்து//
மதபோதயில் சிக்கிக்கொள்ள//
மதபோதகர் அழைப்பு//
***********


2:

உடன்பிறவா உறவுகளை சாய்க்க//
மல்யுத்த போட்டிகிக்கு அழைப்பு //
மதம் என்கிற பெயரில்//
************


3:

 குடிபோதையில் விழ்ந்த//
குடிமகனை தூக்க//
மதபோதையில் வீழ்ந்த மதபோதகன் போட்டி//
****************

4:

 குடிபோதை குழந்தையை//
மதபோதை மிருகமாக்கினான்//
மதபோதகன்//
**************

5:

குடிபோதயில் தெரிகிறது//
மதபோதையில் மறைகிறது/
பல நிதர்சன உண்மைகள்//
*************

6:

மதத்தின் பெயரில் //
நடத்தப்படும் நிகழ்ச்சி தான்/
மரணம் //
*********

7:

போலி ஆசாமிகளின்//
பெட்டிக்கடையில்
விற்பனைப்பொருள்//
மதம்//
*************

8:

மதவெறி அல்ல//
குழந்தைப்போல் மனமே//
இறை முக்திக்கு வழி //

******************


மின் விசிறியில் சுழலும்
இரைக்கைகள் மூன்றும் - ஒன்றாக
சுழன்றால் தான் காற்று என்கிற பலன் கிடைக்கும்.

நான் எந்த மதத்திற்கும்
எதிரானவன் அல்ல,

ஆனால்

மதத்தின் பெயரைக்கொண்டு
நடத்தப்படும்  கொடுமைகளுக்கு
எதிரானவன்.

மதத்திற்காக மனிதத்தை இழக்காதீர்!

எம்மதமும் சம்மதம் எனும்
மதம் பிடித்தவன் நான்

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
21/07/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24