ஓர் கீதம் பாடி!
நாளும் உன்னைத் தேடி
வந்தேன் நான்!
கீதம் பாட தெரியாது
நான் கீதம் பாடினேன்
உனக்காக!
தெரியாத கிதம் பாடி,
உன் தெருக்கோடி உறவுகளிடம்
சிக்கிக்கொண்டேன்!
என் கீதத்தின் கொடுமை
தாளாமல் உன் தெருக்கோடி உறவுகள்
என்னை பார்த்து முறைத்த போதும்!
உனக்காக
ஓர் கீதம் பாடினேன்!
பொருமையை இழந்த
உன் தெருக்கோடி - உறவுகள்
ஒன்றாய் கூடி!
என் மீது கடி தாக்குதல்
நடத்த என்னை
தெருத்தெருவாய் துறத்துகிறது!
என் நல்லி எலும்பை
காப்பாற்ற ஓட்டம் பிடித்தேன்!
நீ! என்னிடம்
ஓர் கீதம் பாடு
என்ற போது யோசனை
செய்யாமல் விட்டுவிட்டேன்!
அதன் பொருள்
இன்று தான் புரிந்துகொண்டேன்!
இனி திரும்பாது என் கால்கள்,
உன் தெரு பக்கமும்,
உன் தெருக்கோடி உறவுகள் உள்ள திசைப்பக்கமும்!
ஆனால் நீ!
என் தெருவிற்கு வரும்
நாளுக்காக நானும் என்
தெருக்கோடி உறவுகளும்
காத்துக் கொண்டிருக்கிறோம்!
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
02/07/17
No comments:
Post a Comment