என் காதல் நிலவே!
சூரியக் குடும்பத்தின்
நிலவின் மகளே-நீ
பூமியில் பிறந்தாய்!
நீ பாலின் நிறமோ!
வெண்பனியின் நிறமோ!
அல்லது இரண்டும் சேர்ந்த கலவை நிறமோ!
நிலவுக்கே இங்கு நிலாச்சோறு!
எங்கு போய் சொல்வேன் -உன்
அன்னையின் அறியாமையை!
நீ! அமாவாசையிலும்
மின்னணும் நிலவென்று
தெரியாத உன் அன்னைக்கு!
மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம்
தலையில் மல்லி!-வைத்து
நீ வீதியில் செல்லும் போது!
என்
இதயத்தில் அம்பு வந்து பாயவில்லை!
ஆனால் ஏனோ வலிக்கிறது.
மஞ்சள் பூசிய நிலவே!
என்னை காயம் செய்தது போதும்! உன்
காதலுக்காக காத்திருக்கிறேன்!
சிரிக்கும் நிலவே!
இதற்கு மேல் பொய்யுறைக்க என்
பேனாவில் மை இல்லை சீக்கிரமாக
சொல்லிவிடு உன் காதலை!
படைப்பு;
கவிக்குயவன்
செங்கை-603001
28/07/17
No comments:
Post a Comment