காக்கி உடை காவலன்!
பச்சை நிற வண்டியில்காக்கி நிற உடையனிந்த - இரு
மனிதரை நம்பி யென் உயிரை
சில மணிநேரம் இவர் காவலில் வைத்து
கண்முடிய உறக்கதில் யென் பயணம் தொடர்கிறது,
உட்கார்ந்த படியே பயணியின் உயிரைக் காத்து
உரிய இடத்தில் சேர்க்கும் வேலை ஒரு- காக்கிக்கு!
இங்கும் அங்குமாய் பயணச்சீட்டுடன்
சில்லரை கேட்டு சுற்றிக்கொண்டு
நின்றபடியே வேலை மற்றொரு -காக்கிக்கு!
இயந்திர வெப்பத்தில் வியர்வை
துளிகள்
சொட்ட சொட்ட நிராடி
கடமையில் கண்ணுறங்காமல் காக்கும்
காவலனாய் ஒரு காக்கி மனிதர்!
கூட்ட நெரிசலில் ஊது கோலுடன்
படியில் நிட்காதே
தம்பி உள்ளே வா -என
புன்சிரிப்புடன் உறவுகளைப் போல்
பழகும் மற்றொரு காக்கி மனிதர்!
இவர்களுக்கு தலை வணங்குகிறேன்!
No comments:
Post a Comment