"பெங்களுர் நாட்கள் "
(22/03/17) 11.00Pm
சென்னை சென்ட்ரலில் இருந்து
பெங்களுர் செல்லும் மின்தொடர் வண்டியில் பெட்டி
எண் "எஸ் 4" இருக்கை எண் "58"
அமர்ந்து உறங்காமல் பயணம் செய்த நான் .
" பல கனவுகளுடன் சென்றேன்"
பெங்களுர்
(23/03/17) 4.55Am
அதிகாலை பெங்களுர்
இரயில் நிலையத்தில் என் பாதம் பதித்தேன்.
என் பார்வை பதியும் இடமெலாம்
அலைகடல் போல் மக்கள் கூட்டம் கண்டேன்.
என்னைப்போல் பலர் பல கனவுளுடன் இங்கு வந்த
என் உடன் பிறவா உறவுகள்
(23/03/17) 5.20 Am
இரயில் நிலையத்தின் வெளியே
காத்திருந்த பேருந்தில் முதல் நபராய் போட்டிகள்
இன்றி பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தேன்.
பேருந்து நடத்துனர் எனக்கு தெரியாத
மொழியில் என்னிடம் பேச பதிலாய் என்
தாய் மொழியில் பதிலளித்தேன்.
தமிழா என்று தமிழில் பேச தொடங்கிய நடத்துநர்
உடன் நானும் என் உயர் அதிகாரியும் .ஒரு நாள்
சிறப்பு பாஸ் வாங்கிக்கொண்டு
என் முதல் பயணம் தொடங்கியது.
(23/03/17)
பேருந்தில் நான் கண்ட ஒரு வாசகம்
"Bye ticket to avoid penalty " அனைத்து
பேருந்திலும் காணப்படும் வாசகம் தான்.
எனோ! என் கண்களுக்கு புதிதாக தெரிந்தது.
கல் எறியப்பட்ட விரிசல் அடைந்த நிலையில் பேருந்து
கண்ணாடி.
No comments:
Post a Comment