Thursday, 16 March 2017

"ஆந்தை"

"ஆந்தை"

பகல் பொழுதில் இரை தேடி
திரியும் ஆந்தை போல் என்-வாழ்கை!

கடிவாளம் இல்லா குதிரை போல்
ஓடுகின்ற என் ஓட்டம்!

பானையில்
அகப்பட்ட நண்டுகளை போல்
என் உறவகள்!

கோமாளியாய்
பிறர் கண்களுக்கு என் தோற்றம்!

என் சட்டைப் பையில் ஓட்டையை
மட்டுமே காண்கிறேன்!

சகதியுடன் சகதியாய்
துளைகிறேன் நான்!

இதன் பின்னும் யென் உயிர்
யென் உடலை விட்டு பிரியவில்லை!

வேதனையும் சோதனையும் பலவும் கண்டேன்
இனி சாதனை படைக்கும் வெறியுடன் யென் பயணம் !.


                                                              -கவிக்குயவன்

                                                                  (செங்கை)


No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24