Tuesday, 31 January 2017

ஈசல்

              ஈசல்

உன்னை ஆணவமாய் பார்த்து
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்-விடு,
உன்னை பாவி யென பழித்தாலும்
குறை கூறினாலும் -விடு,
உன்னை கேலி செய்தாலும்-கூட
ஒருநாளும் வேதனை கொள்ளாதே!

அக்கூட்டம் ஈசலை போல - ஒன்று
போனால் மற்றொன்று தோன்றும்
அவர்களின் ஆணவச் சிரிப்பு-ஈசலின்
வாழ்வை போல அன்றொரு நாள் மட்டுமே!
ஈசலின் ஆணவச்சிரிப்பு ஈட்டியை
சிதைக்குமா யென்ன!

 ஈட்டி போல் கூர்மையாய் இரு
உன் திறனை வாதத்தில் -காட்டாதே!
செயலாய் செயல்படுத்தி
அறிவொளியாய் நின்று காட்டு!
ஈசல்களை கொல்வதல்ல -நம் 
இலக்கு இமயத்தை வெல்வது ஒன்றே!


                                      -கவிக்குயவன்
                                          (செங்கை)









No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24