Saturday, 28 January 2017

ஓடி வா பாரதி! ஓடி வா பாரதி!

ஓடி வா பாரதி!  ஓடி வா!
ஓடி விளையாடும் குழந்தையைக்காண
ஓடி வா பாரதி!  ஓடி வா!
நீ கனா கண்ட புதுமைப்பெண்ணைக்காண
ஓடி வா பாரதி!  ஓடி வா!

உரிமைக்காக போராடும் உன்குலத்தைக்காண
ஓடிவா பாரதி!  ஓடி வா!
காளைகளைக் காத்த புதிய பாரதியை காண
ஓடி வா பாரதி!  ஓடி வா!
புதியதோர் உலகை படைத்த இளைஞனைக்காண
ஓடி வா பாரதி!  ஓடி வா!

ஓடி வா பாரதி!  ஓடி வா!
தமிழன் என்று கத்தினேன்!
தலை நிமிர்த்து நிற்கிறேன் - உன்
தமிழனைக்காண
ஓடி வா பாரதி!  ஓடி வா!
     
                                   -கவிக்குயவன்
                                         (செங்கை)
!

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24