சித்த மயக்கம்
அலைப்பேசியின் அழைப்பில்அலைவரிசையாய் அவள் குரல்-கேட்டு
அசையாமல் நின்றது என் உதடுகள்,
செவிகள் மட்டும் செயல்பட என் உடல்
சிலையாய் மாறி
சிட்டுப் போல் சிறகடித்து என் மனதால்
சில நொடிகள் விண்ணில் பறந்து
சித்தமும் கண்டேன்,
சித்த மயக்கம் தெளியும் வேளையில்
அலைப்பேசியின் அழைப்பை
அணைத்தாளே கொடும்பாவியடா
அவள் !
-கவிக்குயவன்
(செங்கை)
No comments:
Post a Comment