பள்ளிப் பருவம் விதைப்போட்ட-நட்பு
புரிதல் எனும் செடியாய் வளர்ந்து
நம்பிக்கை எனும் மரமாய் நின்று
உன் தோள்கள் நிழலாய் மாறி
என் வேதனை குறைத்தது.
நண்பனே!.........
கால்சட்டை அணிந்து திரிந்த
காலத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
தொடங்கிய நம் நட்புப் பயணம்
சண்டைகள் போட்டிகள் இல்லா நாட்கள் இல்லை!
வெற்றி தோல்வியை மதித்தது இல்லை!
என்னை விட்டு நீ பிரிந்ததும் இல்லை!
எதிர் பார்ப்பு இல்லாமல்
என்னுடன் பழகும் உன் உள்ளம்
கண்டு பெருமை கொள்கிறேன்!
என் உயிர் நண்பனே! . . .
(17.08.2017)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . . .
படைப்பு
சமர்ப்பணம்:
தீபக் ( செங்கை)
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
No comments:
Post a Comment