Wednesday, 12 April 2017

"விவசாயி"

"விவசாயி"

ஏர் கொண்டு உழுது
விதைகள் தூவி
கதிரைக் காத்து
நெல்மணியை அறுவடை செய்து இலாபம்
 காணாமல் விவசாயம் செய்து
நமக்கு சோறு போட்டவன் -இன்று
நடுரோட்டில் நிர்வாணமாய்
போராடி சுற்றுகிரான்.

                             - ( விவசாயி )


போதைப்பொருள் தூவி
மதுவை செய்து
பாட்டலில் அடைத்து
காக்கி சட்டையை காவல் வைத்து
மதுவை விற்று விபச்சாரம் செய்து
கொள்ளை அடித்து
கு(டீ)டி மகன் உயிரைப்பறித்து
குழுந்தையை பட்டினி போட வைத்தவன்-இன்று
சுடிதார் அணிந்து சுற்றுகின்றான் அயல்நாட்டில்.

                          - ( இரண்டு எழுத்து அரசியல்வாதி )


✍🏻படைப்பு:

கவிக்குயவன்

 செங்கை-603001

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24