குறைகள்
என் மனதிற்கு பிடித்த நபர்களின்மனதிற்கு பிடிக்காத நபரார் நான் -இன்று
நேற்று என்னுடன் சிரித்து பேசிய நபர்கள்
இன்று என் சிரம் கண்டு ஒதுங்கி - என்னை
ஒதுக்கிவிட்டு செல்கின்றனர்.
எந்நிலைக் குறையும் வேளையில்
சொந்தமும் நிலையில்லை
நண்பனும் நிலையில்லை - யெனும்
நிதர்சன உன்மைகள் கண்முன்
கன்டேன் இன்று!.
என்னை குறை கூறும் யாரும்
குறைகள் இல்லாதவர் -அல்ல
அவர்கள் குறைகளை மறைத்து,பிறர்
குறையில் தன்னை உயர்த்திக் கொள்ள
நினைக்கும் போலி மகான்கள்.
யாரையும் குறை கூற என் மனம் - விரும்பவில்லை.
என் குறைகளை நீக்கி
என்னை ஒருவன் குறை கூற
முடியாத நிலையுடன் திரும்புவேன்.
படைப்பு ✍🏻
No comments:
Post a Comment