Sunday, 27 May 2018

தேன் சுவை காதல்

தேன் சுவையாய்
என்னுள்
வந்த காதல் - என்
மனதிலே தங்கியது ஏனோ !

என் மனதில்
தங்கிய காதல் - ஒர்
கவியாய் வந்து - என்
மனதை மயக்கியது ஏனோ !

மயங்கிய என் மனமோ
கண்களை மூடிக்கொண்டு
கவியின் நினைவில்
வானில் பறப்பது ஏனோ !

வானில் பறக்கும் - என்
மனமோ கவியை
தேடிச் சென்று கவிப்பாடி -பின்பு
என்னிடம் திரும்புவது ஏனோ !

கவிப்பாடி திரும்பிய -என்
மனமோ இங்கு
உண்ணாமல் உறங்காமல் தானே
கவியின் நினைவில் தவிப்பது ஏனோ !

கவியின் நினைவில்
தவிக்கும் என் மனதின்
நிலையோ ! ஐயோ , பாவம் - கவியே
இதை அறிந்தும் நீ மறுப்பது சரிதானோ !

மறுப்பது வெறுப்பதும் - போதும்
என் மீது காதல் செய்ய
என் கவியே என் துணையாய்
என்றும் நீ வேண்டும் என்னுடன் !

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603 001
28/05/2018

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24