நாற்றிசை நீரால் சூழ்ந்த /
இலங்கை தீவுதனில்/
நல்லறம் கற்று/
பொருள் பெற்று/
இன்பமடைவாய் என/
அமைத்த நூலகம் /
மதி இழந்து, இனவெறி பிடித்த/
மானுட மிருகத்தால்/
வஞ்சிக்கப்பட்டு /
தீக்கிரை ஆனதே!/
ஓராயிரம் பெண்டிரது
துகிலுரிப்பதும்/
ஒற்றை நூலகத்தை/
தீயிட்டு எரிப்பதும்/
காலத்தால் அழியாத/
வன்கொடுமை அல்லவோ!/
அங்கம் கொதிக்கிறது/
அக்கினியில் எரிந்த /
பல்லாயிரம் யாழ் நூல்களின்/
மௌன அலறல் சத்தம்/
தமிழனின் செவிகளை கிழித்து/
விழி வழியாய்/ செந்நீராய்
கொட்டுகிறது./
எரிந்தது நூலகம் அல்ல/
எங்கள் தாயகம்!/
மூன்று பத்து ஏழாண்டு/
கடந்தும் எரித்தாலும்/ முளைத்து நிற்கும்/
யாழ் நூலகம்/
இப்போதாவது போர் தொடு/
எரிப்பதற்கன்றி; வாசிப்பதற்காக!/
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603 001
20/04/2018
No comments:
Post a Comment