விழி மூடவும்
கண்ணுறங்கவும்
முடியாமல் மனம் இங்கு தவிக்கிறது...
சொல்லாத வார்த்தையிலே
பல்லாயிரம் அர்த்தங்கள்
கண்முச்சி விளையாடுதே...
நினைவுகளே பெரும் தொல்லை தான்
உன்னை நினைக்கிற நிமிடங்களில்.....
உயிர் என்பதே இன்று என்பதில்லையே -நான்
சவமாகியே திரிகின்றேனே..
பூர்வ ஜென்ம பந்தம் என்றும்
புரிவதில்லையே
காலம் கடந்த பின்னாலே
வரும் காதல்
கல்லறையில் கூட ஒன்றாய்
இணைவதில்லையே....
மறதி என்ற வரத்தை
கூட இறைவன் எனக்கு
தரவும் இல்லையே!!!
உன் கண் இரண்டை
இரசிக்கும் போதே
ஒரு தலை காதலாய்
காலன் என்னை அழைக்கின்றானே..
உன் மீது நான் கொண்ட காதல்
சரியா ... தவறா....
என சொல்வாய் சகியே...
கவிக்குயவன்
செங்கை-603001
(19/03/2020)
No comments:
Post a Comment