Thursday, 8 November 2018

"இரவலாய் வந்த என் இறைவன்"



உன் தலை மீது என்னை அமரவைத்தாய் பயம் கொண்டேன்,

உன் கைகளை  பிடித்துக் கொள் என்றாய் நம்பிக்கை கொண்டேன்!

உன் கால்களை
என் கால்களால் மிதிக்கின்றேன் இருந்தும்,
நீ !
என் பாதையில் சில முன்னேற்றம் தந்தாய்!

எனக்கு இன்னொரு
அன்னையாகி
தந்தையாகி
என்னுயிர் நண்பனுமாகிய என்     "மிதிவண்டியே ! "

உன்னுடன் என் பயணங்களில் கவலைகள் மறந்த நிலையில் ஆனந்த காற்றை சுவாசிக்கின்றேன்,

இரவலாய் வந்த
என் இறைவனே !
என்றும் உன்னை நேசிக்கிற இந்த அடியேனின் பிழைகளை மன்னித்தருள்வாயாக !
"என் அன்பு மிதிவண்டியே"

படைப்பு
கவிக்குயவன்
செங்கை-603001
08/11/2018

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24