Monday, 13 November 2017

"இன்று போய் நாளை வா "

இன்று போய்
நாளை வா!

பல 'இன்று'
இறந்து போனது தெரியாமல்,
பல "நாளைகள்"
மட்டும் தொடர்ந்து-பிறந்து
கொண்டே செல்கிறது!

நாளை இறந்து
இன்றாகிறது!
இன்று இறந்து
நேற்றாகிறது!
நேற்று இறந்தது
நினைவாகிறது!

''நாளைய'' பிறப்பிற்கும்
"இன்றைய" இறப்பிற்கும்
இடையில் நான்!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001 
(13/11/17)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24