Thursday, 10 March 2022

எம் அன்பு தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கடலைக் தாண்டிய 
இராமபக்தரே - உம் 
திருப்பாதம் பணிந்த பக்தரல்லவா!
அவரே எம் தந்தையல்லவா!

எமக்கும் என் உடன்பிறப்பிற்கும்
உயிர் கொடுத்த இறைவனல்லவா!
எம் தாய்க்கு தாயாய் மாறும் தாயுமானவரல்லவா!

அனுபவப்பாடம் போதிக்கும் 
என் குருவல்லவா!
சோதனையில் தோள் கொடுக்கும் 
என் நண்பனுமல்லவா!

பிறர் துன்பம் தன் துன்பமாய் கருதி, கைக்குட்டையாய் மாறி, 
அவரின் கண்ணீர் துடைக்க 
உதவும் மனமுடையவரல்லவா!

பொன், பொருள் எனும் 
பேராசைக்கடலில் சிக்காது, 
ஆனந்தமாய் அள்ளிக்கொடுக்கும் 
ஆனந்த "ராமன்" அல்லவா!

பாலபூங்காவின் ராமன்!
ஜெயந்தியின் ராமன்!
சுபஆதியின் ராமன்!
குழந்தைகளின் ராமன்!

எல்லாம் வல்ல பரம்பொருளின் 
ஆசி பெற்று பிணியின்றி ஆனந்தமாய்
நெடுநாள் நீடுவாழ  இறைவனை வேண்டுகிறேன்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
 எம் அன்பு தந்தையே!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
10/03/2022

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24