Sunday, 25 July 2021

செந்தூர் அழகே!

நூற்றாண்டில் கால் பாதி கடந்தும்
அழகனை காண இயலாது  மனம் தவிர்த்திருக்க ,,,

இருள் சூழ்ந்த யாமம் பொழுதில்
சந்திரன் முழுநிலவாய் காட்சியளிக்க
நிலவை பின்தொடரும்
சடு குடு சடு குடு 
மின்தொடர்வண்டி 
குக்கூ என்ற
சத்தம் எழுப்பிக் கொண்டே 
"செந்தூர் அழகனைக்கான" எம்மை 
அழைத்துக் கொண்டு செல்கிறது,,,

ஜன்னல் அருகே அமர்ந்த பின்பும்
இமை மூடவும்
விழி உறங்கவும் மறுக்கிறது,,,

ஜன்னல் காற்றும் 
சல சல என்று கேட்காமல் 
என் செவிகளில் அழகன் பெயரை உச்சரித்து கொண்டே வருகிறது,,, 


படைப்பு:
கவிக்குயவன்
செங்கை- 603 001
25.07.2021


No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24